உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவருக்கு பதவி உயர்வு

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 11:36 pm
new-judges-appointed-in-sc

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்துக்கு, புதிதாக, இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொலீஜியம் அமைப்பின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 28 ஆக உயர்ந்துள்ளது. எனினும், மேலும் மூன்று நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close