ராம் ரஹீம் வழக்கு: பஞ்சாப், ஹரியானாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 05:00 pm
ram-rahim-case-sentence-to-be-announced-today

பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபடலாம் என்பதால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆசிரமம் நடந்த வந்த போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் லீலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர், 16 ஆண்டுகளுக்கு முன், கொடூரமாக கொல்லப்பட்டார். 

இந்த கொலையில், ராம் ரஹீமுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, பெண் பக்தர்களை பலாத்காரம் செய்த வழக்கில், ராம் ரஹீமுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பத்திரிகையாளர் கொலை வழக்கில், ராம் ரஹீம் உட்பட, மூன்று பேர் குற்றவாளிகள் என, நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து, ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close