சபரிமலை விவகாரம்: தவறான அறிக்கை தாக்கல் செய்தது கேரள அரசு 

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 02:08 pm
wrong-information-given-by-kerala

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த,10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறித்து, கேரள அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்த, பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர், 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அவர்கள் இருவரும், சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அவர்களை தொடர்ந்து, மேலும் பல பெண்கள் சபரிமலை சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சபரிமலை சென்று திரும்பிய பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியம், அந்த பெண்களின் பெயர் பட்டிலயை வெளியிடக் காேரியும், கனகதுர்கா, பிந்து சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவிற்கு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின், இதுவரை, 10 - 50 வயதுக்குட்பட்ட, 51 பெண்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலருக்கு, 50 வயதுக்கு மேல் ஆவது தெரிய வந்துள்ளது. அதே போல், அந்த பட்டியலில், இடம்பெற்றுள்ள இருவர், ஆண்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதன் மூலம், கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில், தவறான அறிக்கை தாக்கல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close