கற்பனைத் திறன் மிக்கவர் : மல்லையாவை கலாய்த்த நீதிபதிகள்!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 05:22 pm
fiction-of-his-imagination-pmla-court-rejects-vijay-mallya-s-political-vendetta-claims

"தன்னை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவரும் மத்திய அரசின் முயற்சி அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை" என்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், அவர் இவ்வாறு கூறியுள்ளது மல்லையாவின் கற்பனை வளத்தைதான் காட்டுகிறது எனவும் நீதிபதிகள் கிண்டலாக தெரிவித்தனர்.

எஸ்பிஐ வங்கியில்  9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திரும்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அவரை திரும்பவும் இந்தியா அழைத்துவர சட்டரீதியான அனைத்து முயற்சிகளையும்  மத்திய அரசு மேற்கொண்டது. அந்த முயற்சியின் பலனாக, மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லலாம் என்று லண்டன் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் வரும் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், மல்லையாவின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,  மல்லையாவை திரும்பக் கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மல்லையா தரப்பின் இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், சட்டம் அனைவருக்கும் சமமாகதான் உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர், அரசின் சட்டரீதியான நடவடிக்கைகளை பழிவாங்கும் முயற்சி எனச் சொல்வது அவரது கற்பனை வளத்தைதான் காட்டுகின்றது எனவும் நீதிபதிகள் கிண்டலாக கூறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close