சிபிஐ இயக்குநர் நியமன வழக்கு: விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி விலகல்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 12:18 pm
chief-justice-of-india-ranjan-gogoi-won-t-hear-petition-against-m-nageswara-rao

மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அமர்விலிருந்து தாம் விலகுவதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ உயரதிகாரிகள் நியமனத்துக்கான உயர்நிலை தேர்வுக் குழுவில் தானொரு உறுப்பினராக உள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இவ்வழக்கை மற்றொரு அமர்வு வரும் 24 -ஆம் தேதி விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்படுவதாக, உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close