முஸ்லிம் ஆண்களை மணக்கும் இந்து பெண்களின் திருமணம் செல்லாது என்றும் ஆனால் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் கேட்க உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், இந்துக்கள் சிலைகள் மற்றும் தீயை வணங்குகின்றனர். அதனால் முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது, அது அசாதாரணமானது.
அதனால் கணவரின் சொத்தில் உரிமை கோர அந்த பெண்ணுக்கு உரிமை இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு, தன் தந்தை மற்றும் அவரது மூதாதையர் சொத்தில் பங்க கேட்க உரிமை உள்ளது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in