சிபிஐ இயக்குநர் நியமன வழக்கு விசாரணை :மற்றொரு நீதிபதியும் விலகல்!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 01:16 pm
justice-ak-sikri-recuses-himself-from-hearing-the-plea-filed-against-m-nageshwar-rao-s-appointment-as-the-interim-cbi-director


மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அமர்விலிருந்து விலகுவதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி இன்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தன்னார்வ அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரிப்பதாக இருந்தது.

ஆனால், சிபிஐ உயரதிகாரிகள் நியமனத்துக்கான உயர்நிலை தேர்வுக் குழுவில் தானொரு உறுப்பினராக உள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனக் கூறி, கோகோய், விசாரணை அமர்விலிருந்து திங்கள்கிழமை விலகினார்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மற்றொரு நீதிபதியான சிக்ரியும், இந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இருப்பினும், இவ்வழக்கை வேறு நீதிபதிகள் நாளை விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close