அயோத்தி வழக்கு: அரசியல் சாசன அமர்வில் புதிதாக இரு நீதிபதிகள்!

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 01:21 pm
ayodhya-verdict-supreme-court-reconstitutes-bench-justices-ashok-bhushan-and-abdul-nazeer-included

அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இரு நீதிபதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்துள்ளார்.

அயோத்தியில் குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கும், சன்னி வஃபு வாரியத்திற்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரிப்பதற்காக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "விசாரணை அமர்வில் இருக்கும் நீதிபதி யு.யு.லலித், இதற்கு முன்பு வழக்கறிஞராக இருந்தபோது அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர்" என்று எதிர்தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அந்த நீதிபதி லலித் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் புதிதாக சேர்க்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close