கணவனை கொலை செய்த மனைவி: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Jan, 2019 02:58 pm
it-s-not-murder-woman-kills-husband-for-calling-her-and-daughter-prostitutes-sc

விலைமகள் என கூறிய கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் அதனை கொலையாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவன், மனைவியையும், மகளையும் விலைமகள் என திட்டியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கொலை செய்துள்ளார். 

இந்த வழக்கில் தண்டனையை குறைக்கக்கோரி மனைவி மேல்முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்  கணவனே, விலைமகள் என கூறுவதை, குறிப்பாக மகளையும் அந்த வார்த்தை கொண்டு திட்டுவதை எந்த இந்திய பெண்ணும் விரும்பமாட்டார் என தெரிவித்தது.

விலைமகள் என அவர் கூறிய அந்த வார்த்தை தான் அவரை கொலை செய்ய தூண்டியதாகவும், இதனை கொலை என கருதமுடியாது எனவும் உச்சநீதிமன்றம்  கூறியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தண்டனையும் 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close