"பாலியல் வழக்குத் தொடுப்பேன்" என மிரட்டிய பெண்ணுக்கு ரூ.25 லட்சம் அபராதம்! 

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 03:00 pm
bombay-court-fines-woman-rs-25-lakh-for-threatening-rivals-with-fake-molestation-case

"பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடுப்பேன்" என தமது போட்டி நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டிய பெண்ணுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணாவை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு தனியார் நிறுவனத்துக்கும், மும்பையிலிருந்து செயல்பட்டு வரும் மற்றொரு நிறுவனத்துக்கும் இடையே தங்களது நிறுவனங்களின்  வர்த்தகச் சின்னம்  (ட்ரேட்மார்க்) குறித்த பிரச்னை எழுந்தது.

"இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லையென்றால், பாலியல் தொல்லை கொடுத்ததாக தங்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டிவரும்" என, ஹரியாணாவைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளரான நேஹா காந்திர், மும்பை நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், " பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுப்பேன் என நேஹா காந்திர்  மனுதாரரை மிரட்டியுள்ளது விசாரணையில் உறுதியாகிறது. 

சட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்ற குற்றத்துக்காக நேஹா காந்திர் மற்றும் அவரது கணவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close