அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 11:09 am
ayodhya-case-central-government-new-demand-in-supreme-court

அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகாத நிலப் பகுதியை ராமஜென்ம பூமி நிவாஸ் அமைப்பின் வசம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அயோத்தியில் குறிப்பிட்ட இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று ராமஜென்ம பூமி இயக்கத்தினரும், சன்னி வஃபு வாரியமும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

முன்னர் அறிவித்தப்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இவ்வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே இன்று விசாரணையில் பங்கேற்க இயலாத சூழலால், விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி கையகப்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குள்ளாகாத நிலத்தை ராமஜென்ம பூமி  நிவாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும். மொத்தம் கையகப்படுத்தப்பட்டுள்ள 67 ஏக்கர் நிலத்தில் 0.313 ஏக்கர் நிலம் மட்டுமே சர்ச்சைக்குரியது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close