சிபிஐ முன்னாள் இயக்குநர் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 02:21 pm
supreme-court-has-dismissed-a-pil-challenging-the-former-cbi-special-director-rakesh-asthana-s-appointment-as-dg-of-bcas

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவை, விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பின் பொது இயக்குநராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக, இதே கோரிக்கை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

லஞ்ச புகார் தொடர்பாக ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவரை வேறெந்த பதவியிலும் நியமிக்கக் கூடாது என பொது நல வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close