பட்ஜெட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 11:24 am
case-filed-in-supreme-court-against-budget

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம். சர்மா என்ற வழக்கறிஞர் இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். 

அரசமைப்புச் சட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பிரிவு இல்லை என்றும், எனவே பட்ஜெட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின்படி முழு பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில், ரிசர்வ் வங்கி மூலதன நிதியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்த இதே வழக்கறிஞர் எம்.சர்மாவை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததுடன் ரூ.50,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைபெறும் ஆண்டில், அரசுக்கு ஏற்படும் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதும், அடுத்து வரக்கூடிய புதிய அரசின் சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதும் மரபாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவையில் தாக்கல் செய்தார். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close