சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்: சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:59 am
west-bengal-cbi-matter-cbi-files-affidavit-in-the-supreme-court

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடான சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய்  தலைமையிலான அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாரதா நிதி நிறுவன மோசடியில் காவல் துறை உயரதிகாரிகளுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. முக்கிய குற்றவாளிகளிடமே ஆவணங்களை சிறப்பு விசாரணைக் குழு அளித்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பையும் மீறி, தற்போதைய கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் அறிவுறுத்தலின்படி இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு உள்ளூர் அதிகாரிகளும் துணைப் போய் உள்ளனர்.

மேலும், தொலைப்பேசி அழைப்புகள் தொடர்பான பல விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கு முன், முக்கிய ஆவணங்களை அழிக்கவும் முயற்சிகள் நடைபெற்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close