சிபிஐ விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:10 pm
the-police-commissioner-of-kolkata-rajeev-kumar-will-appear-before-the-central-bureau-of-investigation-cbi-in-shillong

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடக் கோரி சிபிஐ தாக்கல் செய்த வழக்கில், அவர் மேகலாயா மாநிலம், ஷில்லாங்கில் சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிபிஐ  தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து, கொல்கத்தா காவல் ஆணையர், மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உரிய விளக்கம்  அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இவ்வழக்கின் விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது,

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close