பிரபல வழக்குரைஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 03:39 pm
attorney-general-moves-contempt-petition-against-prashant-bhushan

சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதில், உச்சநீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக பிரபல வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷணுக்கு எதிராக, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே. வேணுகோபால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரசாந்த் பூஷண் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், "சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமனம் தொடர்பாக, பிரதமர்  மோடி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை ஜோடித்து, உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது" என  குறிப்பிட்டிருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில், "சிபிஐ அமைப்புக்கான இடைக்கால இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு தேர்வு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை உள்நோக்கத்துடன் விமர்சிக்கும் விதத்திலும், நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close