அவமதிப்பு வழக்கு: பிரபல வழக்குரைஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 12:41 pm
supreme-court-contempt-notice-to-prashant-bhushan-in-case-over-cbi

தன் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி, பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை விமர்சித்து, பிரசாந்த் பூஷண் பிப்ரவரி 1 -ஆம் தேதி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமனம் தொடர்பாக, பிரதமர்  மோடி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை ஜோடித்து, உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது" என  குறிப்பிட்டிருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே.வேணுகோபால், பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close