சபரிமலை தீர்ப்பு அலசி, ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பு: நீதிபதி

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 01:39 pm
sabarimala-judgment-was-analyzed-judgment-judge

சபரிமலை ஐயப்பன் சன்னிதிக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு, பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து தான் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

 தாய்மையடையும் பக்குவம் உள்ள பெண்கள் வாடையே இல்லாமல் வாழ்ந்து வருபவர் என்று பக்தர்களால் நம்பப்படும் நைஷ்டீக பிரம்மச்சரியான ஐயப்பனை பெண்கள் தரிசிக்க வருவதில் நீண்ட காலமாக ஓர் மரபு அனுசரிக்கப்பட்டு வந்தது. அதாவது பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட, ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சபரிமலை சன்னிதியில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த 56 சீராய்வு மனு, 4 ரிட் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. 

மனுதாரர் தரப்பில் ஆஜரான மோகன் பராசரன், " சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்கள் செல்லக்கூடாது என்பது தீண்டாமையோ, ஜாதி - மத பாகுபாடோ இல்லை, கோவில் மரபு மற்றும் மத நம்பிக்கை காரணமாகவே பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், உரிய கோவில் மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் வரலாம் என வாதாடினார். 

அப்போது, வெறும் தீண்டாமையை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை எனவும், பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

இதை தொடர்ந்து கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பதில்லை என்பது தீண்டாமை தான். திருப்பதி, காசி விஸ்வநாகர் கோவில்களும் பாகுபாடு காட்டப்படாத கோவில்கள் தான் என்றும், மத நம்பிக்கையில் நீதிமன்றம் நிச்சயம் தலையிடலாம் எனவும் கேரளா அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close