சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 03:00 pm
sabarimala-issue-the-devasam-board-approves-the-verdict

சபரிமலை சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையின்போது,சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை ஏற்பதாக உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலை சன்னிதியில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த 56 சீராய்வு மனு, 4 ரிட் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. 

மனுதாரர் தரப்பில் ஆஜரான மோகன் பராசரன், " சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்கள் செல்லக்கூடாது என்பது தீண்டாமையோ, ஜாதி - மத பாகுபாடோ இல்லை, கோவில் மரபு மற்றும் மத நம்பிக்கை காரணமாகவே பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், உரிய கோவில் மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் வரலாம் என வாதாடினார். 

அப்போது, வெறும் தீண்டாமையை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை எனவும், பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

இதை தொடர்ந்து கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பதில்லை என்பது தீண்டாமை தான். திருப்பதி, காசி விஸ்வநாகர் கோவில்களும் பாகுபாடு காட்டப்படாத கோவில்கள் தான் என்றும், மத நம்பிக்கையில் நீதிமன்றம் நிச்சயம் தலையிடலாம் எனவும் கேரளா அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதனிடையே, அனைத்து வயது பெண்களும் சபரிமலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவசம் போர்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும்,  எந்த வழக்கமும், சம்பிரதாயமும் சம உரிமையை பறித்தால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் தங்களது நிலைபாட்டை மாற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, சீராய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close