கும்பமேளா- பெண்கள் குளிக்கும் படங்களை வெளியிட தடை

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 03:14 pm
allahabad-hc-bans-publication-of-photos-of-women-bathing-in-kumbh-mela

கும்ப மேளாவில் நதியில் குளிக்கும் பெண்களின் புகைப்படத்தை வெளியிட அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. தற்போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் இந்த விழா சென்ற மாதம் 15 ஆம் தேதி முதல் வரும் மார்ச் வரை நடைபெறுகிறது. இந்த கும்ப மேளாவின் போது கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர்.

இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஆண்களும் பெண்களுமாக லட்சக்கணக்கானோர் நதியில் புனித நீராடி வருகின்றனர். இந்த புனித நீராடலை பலர் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அச்சு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது குறித்து பொது நல வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கில், பெண்கள் கும்ப மேளா பகுதியில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பத்திரிகை அல்லது சமூக வலை தளங்களில் வெளியிடக் கூடாது. மீறி யாராவது வெளியிட்டால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close