சோனியா மருமகனிடம் 24 மணி நேரத்துக்கும் மேல் தொடரும் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 05:11 pm
robert-vadra-has-been-questioned-for-around-24-hours-since-february-6-by-enforcement-directorate

லண்டனில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை இன்றுவரை 24 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ்  பதிவுசெய்யப்பட்ட வழக்கில், கடந்த 6 -ஆம் தேதி முதல் வதேராவிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இன்று காலையும் அவர்,டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு தமது இல்லத்திலிருந்து பைக்கில் சென்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

ஜெய்ப்பூரில் ஆஜர்: இதேபோன்று, ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியது தொடர்பான மற்றொரு வழக்கில், ராபர்ட் வதேராவும், அவரது  தாயார் மயுரீன் வதேராவும் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் விசாரணைக்காக ஆஜராகினர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close