சிபிஐ முன்னாள் இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 12:37 pm

cbi-s-nageswara-rao-guilty-of-contempt-says-supreme-court-and-fine-him-rs-1-lakh

சிபிஐ அதிகாரி ஏ.கே.ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான அவமதிப்பு வழக்கில், சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர், இன்று நாள் முழுவதும் நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறி சிபிஐ அதிகாரியை அவர் பணியிட மாற்றம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு நாகேஸ்வர ராவ் ஆஜாரானார். 

அப்போது, "நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதத்தில் நாகேஸ்வர ராவ் செயல்பட்டுள்ளது இவ்வழக்கின் விசாரணையில் உறுதியாகிறது. எனவே, அவரது இந்த செயல், அவரின் பணிக்காலத்தில் கருப்புப்புள்ளியாக தான் இருக்கும்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அதற்கு, "நாகேஸ்வர ராவ் கடந்த 32 ஆண்டுகளாக குற்றம், குறையற்ற முறையில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.
'சிபிஐ அதிகாரி ஷர்மாவின் பணியிட மாற்ற விவகாரத்தில், தான் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை என்றும், தன்னுடைய தவறுக்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்'  எனவும் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

எனவே, அவரது கோரிக்கை இந்த நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்" என மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் வாதிட்டார்.

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் நகரில் காப்பக விவகாரம் குறித்து விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.ஷர்மாவை, சிஆர்பிஎஃப் படைப்பிரிவுக்கு மாற்றம் செய்து, நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறி, சிபிஐ அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததால், நாகேஸ்வர ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close