உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற எண் -3ல் சீலிங் கீழே இறங்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற எண் -3ல் இன்று திடிரென்று சீலிங் கீழே இறங்கியுள்ளது. கீழே இறங்கியதை அறிந்த அந்த அறையில் இருந்த நீதிபதிகள் 3 பேர் உடனடியாக அறையை விட்டு வெளியேறினர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
அறையின் ஓரத்தில் சீலிங்கில் பிளவு ஏற்பட்டு அது கீழே இறங்கியுள்ளது. பின்னர் கட்டிட உதவியாளரை கொண்டு அது சரி செய்யப்பட்டது. இதனால் அந்த அறையில் நீதிபதிகள் அமர்வு வழக்குகளை விசாரிப்பது 20 நிமிடம் தாமதமாகியுள்ளது.
newstm.in