சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 03:18 pm
saradha-chit-fund-case-calcutta-high-court-has-granted-anticipatory-bail-to-nalini-chidambaram

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி, கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

முன்னதாக இந்த வழக்கில், நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், "சாரதா நிதி நிறுவனத்தில் மக்கள் செய்துள்ள முதலீட்டு தொகைகளை வேறு வழிகளில் தவறாக பயன்படுத்துவது தொடர்பான சதிச் செயலில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுதிப்தா சென் உள்ளிட்டோருடன் சேர்ந்து நளினி சிதம்பரம் ஈடுபட்டார்.

மேலும்,செபி, நிறுவன விவகாரங்கள் துறை உள்ளிட்டவை இவ்வழக்கு விசாரணையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, சாரதா நிதி நிறுவனத்தின் நிர்வாகத்திடமிருந்து நளினி சிதம்பரம் 1.4 கோடி ரூபாய்  பெற்றுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close