அம்பானிக்கு சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 10:57 am
anil-ambani-guilty-of-contempt-he-will-go-to-jail-if-fails-to-pay-rs-450-crore-ericson

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி குற்றவாளி என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பிரபல எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. தவிர, நீதிமன்றம் விதித்த தீர்ப்பை பின்பற்றவில்லை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளித்தது. தவிர, 4 வாரங்களுக்குள், எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால், அனில் அம்பானி மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close