உத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 11:58 am
supreme-court-slams-anil-ambani-on-ericsson-issue

ரிலையன்ஸ் நிறுவன அதிபரும், முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி, எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை, தராததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அம்பானியை  குற்றவாளி என அறிவித்த காேர்ட், 4 வாரத்திற்குள், 453 கோடி ரூபாயை, எரிக்சன் நிறுவனத்திடம் வழங்காவிட்டால், மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது. 

பிரபல எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, அந்த நிறுவனம், தனக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிச., 2018க்குள் அந்த தொகையை வழங்க வேண்டும் என, அனில் அம்பானிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், அனில் அம்பானி அந்த தொகையை வழங்காததால், அவருக்கு எதிராக, எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்.காம் நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக, எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை செலுத்த முடியவில்லை என அம்பானி தரப்பில் கூறப்பட்டது.

எனினும், இதை ஏற்காத நீதிபதிகள், அனில் அம்பானியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் உட்பட, நான்கு பேரை குற்றவாளிகள் என அறிவித்த கோர்ட், நான்கு வாரங்களுக்குள், 453 கோடி ரூபாயை எரிக்சன் நிறுவனத்திடம் செலுத்தாவிட்டால், அனில் அம்பானி உள்ளிட்டோர், மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என, நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தவிர, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், ஒரு கோடி ரூபாய் செலுத்தும்படியும், அம்பானிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close