அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 12:31 pm
gauri-lankesh-case-rahul-gandhi-sitaram-yechury-summoned-over-comments

ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மும்பை மாநகர  குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ், கடந்த 2017 செப்டம்பர் மாதம், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
"பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுவோர் தாக்கப்படுகின்றனர், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர், ஏன் கொலைக்கூட செய்யப்படுகின்றனர்" என, கௌரி லங்கேஷ் மரணம் நிகழ்ந்த 24 மணி நேரத்துக்குள் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

இதையடுத்து அவர் மீதும், இந்த விவகாரத்தில் இதேபோன்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து  தெரிவித்த சீதாராம் யெச்சூரி மீதும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஜோஷி என்பவர், மும்பை பெருநகர குற்றவியல் அவதூறு வழக்குத் தொடுத்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 25 -ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம், ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close