மீ டூ விவகாரம்- பத்திரிகையாளர் ப்ரியா ரமணிக்கு ஐாமீன்

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Feb, 2019 12:23 pm
journalist-priya-ramani-after-being-granted-bail-by-patiala-house-court

மீ டு விவகாரத்தில் பத்திரிக்கையாளர் ப்ரியா ரமணிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

கடந்த வருடம் இந்தியாவை உலுக்கிய மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது மீ டூ இயக்கம். வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூக வலைதளத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்படத் துறையினர், இலக்கியத் துறையினர் உட்பட பல்வேறு துறையில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் அம்பலமானது. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு படி முன்னேறி, அப்போது உள்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்த எம்.ஜே.அக்பர் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் வைக்கப்பட்டன.

இந்த புகார்களை முதலில் வைத்தவர் தி ஏசியன் ஏஜ் பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றிய ப்ரியா ரமணி. பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஜே.அக்பர் தன்னுடைய பதவியை அக்டோபர் 17-ம் தேதி ராஜினாமா செய்தார்.

பெண் பத்திரிக்கையாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த எம்.ஜே.அக்பர், இவர் மீது புகார்கள் கொடுத்த பத்திரிக்கையாளர் ப்ரியா ரமணி மீது மான நஷ்ட வழக்கினை பதிவு செய்தார். இந்த வழக்கினை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பத்திரிகையாளர் ப்ரியா ரமணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close