இரண்டுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாதா?

  Newstm Desk   | Last Modified : 25 Feb, 2019 01:26 pm
political-party-shall-not-setup-candidates-who-have-more-than-two-children

இரண்டுக்கு மேல் குழந்தைகள் பெற்றவர்களை, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக  தேர்வு செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவ்வளவுதான் தேர்தல் செலவு செய்ய வேண்டும், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளுடன், இரண்டுக்கு மேல் குழந்தைகள் பெற்றவர்களை, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக தேர்வு செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close