ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு- ராஜிவ் சக்சேனாவுக்கு ஜாமின்

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Feb, 2019 05:08 pm
augustawest-land-case-rajiv-saxena-gets-bail

அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  ராஜிவ் சக்சேனாவுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் தேதி துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ராஜிவ் சக்சேனா, இடைக்கால ஜாமீன் கோரியதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதையடுத்து மேலும் 3 நாட்களுக்கு அவரது இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்  நடந்தது. 

இந்த விசாரணையின் முடிவில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜிவ் சக்சேனா அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 ​newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close