அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வு - உச்சநீதிமன்றம் யோசனை

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 12:10 pm
supreme-court-favours-for-mediation-in-ayodhya-case

அயோத்தி வழக்கில் சமப்பந்தப்பட்ட வழக்குதாரர்கள் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சொந்தம் கொள்வது தொடர்பாக நிர்மோஹி அகோரா, சன்னி வஃபு வாரியம், ராம் லல்லா ஆகிய மூன்று பிரிவினருக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இந்த வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியபோது, மூன்று தரப்பினரும் நிலத்தை சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தனியார் நிலம் தொடர்பான சர்ச்சை அல்ல இது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. சமரசத்தீர்வுக்கான வாய்ப்பை உண்மையிலேயே வழங்க விரும்புகிறோம். அதற்கான 1 சதவீத வாய்ப்பு இருந்தாலும், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சமரசத் தீர்வை எட்டுவது தொடர்பாக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close