நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்தே ஆக வேண்டும்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம் !

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 03:21 pm
delhi-high-court-upholds-eviction-of-associated-journals-limited-from-herald-house

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அசோசியேடட் ஜெர்னல் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனால், டெல்லியில் உள்ள தமது அலுவலகத்தை கட்டாயம் காலி செய்தே ஆகவேண்டிய நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம்(ஏஜெஎல்), குத்தகை நிபந்தனைகளை  மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹெரால்டு  ஹவுல் வளாகத்திலிருந்து அந்நிறுவனம்,  கடந்த ஆண்டு நவம்பர் 15 -ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று, அக்டோபர் 30 -ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏஜெஎல் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த டிசம்பர் 21 -ஆம் தேதி உத்தரவிட்ட தனி நீதிபதி, இடத்தை காலி செய்ய மனுதாரருக்கு  இரண்டு வாரம் அவகாசம் அளித்திருந்தார்.


இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம்,  டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close