ரூ. 1 லட்சம் நன்கொடை கொடு; உடனே பெயில் பெறு: தெலுங்கானா காேர்ட் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 12:07 pm
to-get-bail-donate-rs-1-lakh-to-families-of-pulwama-martyrs-telangana-high-court

தெலுங்கானாவில், மக்கள் பணம், 150 கோடியை மாேசடி செய்த, சன் பரிவார் குரூப் நிறுவனர்கள், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தோர் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படும் என, தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தெலுங்கானாவில், சன் பரிவார் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கி நடத்திய நபர்கள், 14 ஆயிரம் முதலீட்டாளர்களுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாயை மாேசடி செய்தனர். இது தொடர்பாக, அந்த நிறுவனத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, சன் பரிவார் நிறுவனத்தினர்,  உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சன் பரிவார் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள், புல்வாமா தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தால், உடனடியாக ஜாமின் பெறாலம் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். 

நீதிபதிகளின் இந்த தீர்ப்புக்கு, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close