11.8 லட்ச பழங்குடியினரை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்றும் உத்தரவை நிறுத்தியது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 09:54 pm
supreme-court-order-to-evict-forest-dwellers-stayed

பட்டா மறுக்கப்பட்ட 11.8 லட்சத்து பழங்குடியினரை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 13ம் தேதி பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

2006ம் ஆண்டு, 3 தலைமுறைகளுக்கு மேல் காடுகளில் வசித்து வரும் பழங்குடியினருக்கு, அந்த நிலங்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, அந்த சட்டத்தின் கீழ், நில பட்டாக்கள் நிராகரிக்கப்பட்ட பழங்குடியினர் அனைவரையும், காடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும், என வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், சுமார் 11.8 லட்சம் பழங்குடியினரை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும், என கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. மாநில அரசுகள் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்த உத்தரவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பழங்குடியினர் நலத்திற்காக, அந்த உத்தரவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும், என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பழங்குடியினருக்கு பட்டா வழங்க பின்பற்றப்பட்ட விதிமுறைகளை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 13ம் தேதிக்கு தற்காலிகமாக ஒத்திவைத்தது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close