அயோத்தியின் கடந்த காலத்தை வரையறுக்க இயலாது - உச்சநீதிமன்றம் கருத்து

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 12:11 pm
we-cant-control-over-the-past-sc-said-on-ayodhya-case

அயோத்தியில் கடந்த காலத்தில் என்ன நடந்தது?. அங்கு படையெடுத்தவர் யார்? அரசர் யார்? கோயில் இருந்ததா அல்லது மசூதி இருந்ததா? என்பதையெல்லாம் வரையறுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தற்போதைய பிரச்னை என்னவென்பது மட்டுமே உச்சநீதிமன்றத்துக்கு தெரியும் என்றும், அதற்குத் தீர்வு காண்பது மட்டுமே உச்சநீதிமன்றத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மத்தியஸ்தரை அமைப்பது குறித்து இன்று முடிவை அறிவிப்பதாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”ஒரேயொரு மத்தியஸ்தரை நியமிக்க முடியாது; பல மத்தியஸ்தர்களை அடங்கிய குழுவைத்தான் நியமிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மதம், நம்பிக்கை மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் இது. இந்தப் பிரச்னையின் ஆழத்தை உணர்ந்திருக்கிறோம். கடந்த காலத்தை தவிர்த்துவிட்டு, தற்போதைய பிரச்னைக்கு தீர்வு காண்பதே நோக்கம்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதியாக, வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிப்பது குறித்து இறுதி முடிவெடுப்பதை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை சொந்தம் கொண்டாடுவது குறித்து சன்னி வஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று பிரிவினருக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close