வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க கோரும் மனு - உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:26 am
supreme-court-refuses-to-hearing-plea-for-linking-voter-id-with-aadhar

வாக்காளர் அடையாள அட்டைகளுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு இன்று பரிசீலனக்கு வந்தது. அப்போது, கோரிக்கை தொடர்பாக, மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும், அவர்கள் சரியான உத்தரவை பிறப்பிப்பார்கள் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

முன்னதாக, பான் அட்டை, அரசின் சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், வங்கிக் கணக்கு, தனியார் நிறுவன சேவைகள் போன்றவற்றுக்கு ஆதார் கேட்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலமாக கள்ள வாக்குகளை தடுக்க முடியும் என்று பரவலான கோரிக்கை எழுந்தது. அதுதொடர்பாக, மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close