10% இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 12:28 pm
sc-refused-to-stay-on-10-reservation-for-oc

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு, அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வகைச் செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியது. இந்த நிலையில், இச்சட்டத்துக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனக் கோரி, வழக்கின் விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close