துபாயில் என்னை சிபிஐ மிரட்டியது: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:05 pm
cbi-chief-asthana-threatened-me-in-dubai-christian-michel-to-court

அகுஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, துபாயில் வைத்து தன்னை மிரட்டியதாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

அகுஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் வைத்து தன்னை சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா சந்தித்ததாகவும், அப்போது அவர், "சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, என்றால் சிறையில் உன் வாழ்க்கையை நரகமாக அமையும்" என்று கூறி தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் சேர்த்து சிறையில் அடைந்ததாகவும், அருகே இருந்த அறையில் பிரபல கேங்ஸ்டர் சோட்டா ராஜன் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். "நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று என்னை கொலை குற்றவாளிகளுடன் அடைத்தார்கள்" என்று நீதிமன்றத்தில் மைக்கேல் கேள்வி எழுப்பினார்.

மைக்கேலை, பொருளாதாரக் குற்றவாளிகளுக்கான சிறைக்கு மாற்ற, அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர், "அவர்கள் சிறை அறை மாற்ற வேண்டுமென்றால், சிறை கண்காணிப்பாளரிடம் செல்ல வேண்டும். நேராக நீதிமன்றத்திற்கு வரக்கூடாது," என மறுப்பு தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close