ராபர்ட் வதேராவின் முன் ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Mar, 2019 07:10 pm
court-extends-vadra-s-anticipatory-bail-till-mar-25

பணமோசடி வழக்கு ஒன்றில் ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை மார்ச் 25-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் சொத்து வாங்கியதில் பணமோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டியது அவசியம் என அமலாக்கத்துறை வாதிட்டது. 

இந்த வழக்கு கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை , இது அரசியலாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு ஒத்துழைக்குமாறு வதேராவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close