கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 03:28 pm
court-extends-interim-protection-from-arrest-to-karti

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை, ஏப்., 26 வரை நீட்டித்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தின் போது, சட்ட விதிகளை மீறி, அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கார்த்தி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அவர்கள் இருவரையும் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முடிவு செய்தது. தங்களை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இதை தொடர்ந்து, இருவரையும் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றுடன் அந்த தடை நிறைவடைந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இருவரின் கோரிக்கையை ஏற்று, அவர்களை, ஏப்., 26 வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close