ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 10:12 am
supreme-court-agree-to-hear-plea-to-restrict-contesting-polls-more-than-one-seat

தேர்தலில், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இரண்டு வாரங்கள் கழித்து விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்தே, எம்.எம்.சாந்தாகௌடார், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் முன் நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, இது தொடர்புடைய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், வேட்பாளர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பரிந்துரையை சட்டமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close