ஹர்திக் பட்டேல் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Mar, 2019 05:57 pm
hardik-patel-can-t-contest-polls-court-rejects-plea-to-stay-conviction

குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தியவர் ஹர்திக் படேல்.

குஜராத் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தி நாடு முழுவதும் பிரபலமடைந்தார். 2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்க ஹர்திக் படேல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மெஹலானாவில் நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் ஹர்திக் படேலை குற்றவாளியாக  அறிவித்து குஜராத் நீதிமன்றம் சிறையிலடைத்தது.

அதைத்தொடர்ந்து பிணையில் சிறையிலிருந்து வெளி வந்த அவர், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதோடு ஜாம்நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. 

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் ஆறு ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதி அமலில் உள்ளது. இதன் காரணமாக அவர் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று கருதி, தான் குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் இன்று மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ஹர்திக் பட்டேலை குற்றவாளி என்று அறிவித்து வெளியிடப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close