'பி.எம்.நரேந்திர மாேடி' படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 02:22 pm
delhi-high-court-rejects-pil-to-stay-pm-modi-biopic

பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள, பி.எம்.நரேந்திர மாேடி திரைப்படத்தை ரத்து செய்யும் படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் அடிப்படையில், அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த படத்திற்கு, பி.எம்.நரேந்திர மாேடி என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படம், இம்மாதம், 5ம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது. மக்களவை தேர்தல் சமயத்தில் இந்த படத்தை வெளியிட்டால், அது தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் முடியும் வரை, இந்த படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, சில அமைப்பின் சார்பில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close