ஹார்திக் படேலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:47 am
sc-declines-hardik-patel-s-plea-for-urgent-hearing

தன் மீதான தண்டனையை ரத்து செய்யக் கோரி, படேல் சமூக போராட்ட ஒருங்கிணைப்பாளரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளவருமான ஹார்திக் படேலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

குஜராத் மாநிலத்தில், படேல் சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த 2015-இல் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவரான ஹார்திக் படேல், கலவரத்தையும், வன்முறையையும் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. எனினும், அவர் ஜாமீனில் வெளிவந்தார். தனக்கான தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஹார்திக் படேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் ஹார்திக் படேல் போட்டியிடுவது உறுதியானது. இந்நிலையில், தனக்கான தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை ஹார்திக் படேல் தாக்கல் செய்தார். எனினும், அதை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close