'மாஜி' கமிஷனருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் 

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 01:46 pm
supreme-court-issues-notice-to-former-kolkata-police-commissioner

சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கு தொடர்பாக, கோல்கட்டா மாஜி போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரை ஏன் கைது கூடாது என விளக்கம் கோரி, அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சாரதா சிட்பண்டு நிறுவனம், பொதுமக்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயை திரும்ப தராமல் மாேசடி செய்தது. இது தொடர்பாக, அந்த நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இதில், கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் சிபிஐ அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ராஜிவ் குமார், கமிஷனர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

இதையடுத்து, அவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐ தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக, ராஜிவ் குமார் விளக்கம் அளிக்கும் படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜிவ் குமாரை ஏன் கைது செய்யக்கடாது என, விளக்கம் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. வரும், 15ம் தேதி, இ்ந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close