ரபேல் விவகாரத்தில் மீண்டும் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:57 am
sc-will-hear-the-review-petition-on-rafale-deal

விமானப்படைக்கு தேவையான, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதை அடுத்து, இது தொடர்பாக, மீண்டும் விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், விதிமீறல்கள் நடந்துள்ளதாக, பா.ஜ., தலைமையிலான அரசு மீது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்தத்தில், எந்த வித விதிமீறலும் நடைபெறவில்லை என தீர்ப்பளித்தது. எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது குறித்து விரைவில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. 

தவிர, மனுதாரர் சார்பில், முன்வைக்கப்படும் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கவும் நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். விரைவில் விசாரணை தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close