கோவில் திருவிழாக்களுக்கு பட்டாசு வெடிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 12:06 pm
do-not-ban-fireworks-in-temple-festivals

பட்டாசு வெடிக்க, விற்க தடைக்கோரிய வழக்கில் மத்திய அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. 

பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அர்ஜூன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. இதில் பட்டாசு தயாரிக்க பேரியம் உபயோகிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அப்போது, பட்டாசு ஆலைகள் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் பேரியம் இன்றி பட்டாசு தயாரிக்க முடியாது எனவும், பசுமை பட்டாசு தயாரிக்க நீரி அமைப்பின் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதாக கூறினார். 

உலகில் எந்த ஒரு இடத்திலும் பேரியத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும், பேரியத்துக்க பதில் வேறு வேதி பொருள் இருந்தால் அதைகொண்டு பட்டாசு தயார் செய்ய நாங்கள் தயார் என தமிழக பட்டாசு உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்தது. 

இதைகேட்ட நீதிபதி, தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது போன்று உலகில் வேறெங்கும் வெடிப்பதில்ல்லை. ஆகவே உலக நாடுகளின் விதியோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது என தெரிவித்தார். 

இதைதொடர்ந்து, கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் திருவிழாக்களை பட்டாசு வெடிக்காமல் நாங்கள் கொண்டாடுவதில்லை. கோவில் திருவிழாக்களில் பட்டாசுகள் முக்கியம் என தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், கோவில் திருவிழாக்களுக்கு பட்டாசு வெடிக்க நாங்கள் தடைவிதிக்கவில்லை என கூறினர். மேலும், வேலையிழந்து நிற்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு மாற்றுவழி ஏற்பாடு செய்யவேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close