"டிக் -டாக்" தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 01:21 pm
supreme-court-refuses-to-remove-tick-tok-ban

டிக் - டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி, அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், குறும்பு வீடியோக்களை வெளியிடவும், டிக் - டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இச்செயலையை உருவாக்கிய சீன நிறுவனம் தாக்கல் செய்த இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் விதித்த டிக் - டாக் செயலிக்கான தடையை நீக்க மறுப்பு தெரிவித்த, உச்ச நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 22 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close