'மோடி’ படத்தை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 01:05 pm
supreme-court-refers-ec-to-watch-narendra-modi-s-biophic-film

பிரதமர் நரேந்திர மோடி  என்ற திரைப்படத்தின் மீதான தடையை விலக்கக் கோரிய வழக்கில், அந்த படத்தை பார்த்துவிட்டு உரிய முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மோடியின் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இத்திரைப்படத்தை கடந்த 11ம் தேதி வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதை சுட்டிக் காட்டி, படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதை எதிர்த்து படக்குழுவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மோடி திரைப்படத்தை படக்குழுவினர் தேர்தல் ஆணையத்துக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். அதைப் பார்த்த பிறகு தடையை தொடருவதா, வேண்டாமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close