மசூதிக்குள் பெண்களை அனுமதிக்க உத்தரவிடக்கோாி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 06:53 pm
plea-in-supreme-court-to-allow-muslim-women-to-enter-offer-prayer-namaz-in-mosques

இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்களையும் அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓர் முஸ்லிம் தம்பதியர்  இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த முஸ்லிம் தம்பதியா்களான, யாஸ்மீஜ் ஜீபா் அகமது மற்றும் ஜீபா் அகமது பீா்சாதே ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில்,  "இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில் ஆண்கள் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  பெண்களை மசூகளில் வழிபட அனுமதிக்கக்கூடாது என்று குரானில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமின்றி இத்தகைய வழக்கம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனி மனித உரிமை குறித்ததான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது.

மேலும், கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் சன்னிதியில் வழிபாடு நடத்த அனைத்து வயது ஆண்களுக்கும் , குறிப்பிட்ட வயது பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற பாரம்பரியம், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, பெண்ணுரிமை மற்றும் தனி மனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக் கருத்து தெரிவித்து, அனைத்து வயது பெண்களையும் அந்த ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

எனவே உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில், மசூதிகளில் பெண்களை வழிபட அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று"  இஸ்லாமிய தம்பதிகளான யாஸ்மீஜ் ஜீபா் அகமது மற்றும் ஜீபா் அகமது பீா்சாதே ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close